பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரெயில்களில் போலீசார் தீவிர சோதனை
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தர்மபுரியில் ரெயில்களில் போலீசார் தீவிர சோதனை செய்தனர்.
தர்மபுரி:
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி தர்மபுரி ரெயில்வே போலீசார் ரெயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் பயணிகள் கொண்டு வந்த பொருட்களை பார்வையிட்டு சோதனை நடத்தினார்கள். இதேபோல் ரெயில் நிலைய பிளாட்பாரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ரெயில் பயணிகள் கொண்டு சென்ற பொருட்கள், உடமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தர்மபுரி ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மாரண்டஅள்ளி முதல் ஓமலூர் வரை உள்ள ரெயில் தண்டவாள பகுதிகளிலும் தொடர் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு இந்த சோதனைகள் தொடரும் என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story