ஓட்டல், தியேட்டர், வணிக வளாக ஊழியர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்
பெங்களூருவில் ஓட்டல்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா கூறினார்.
பெங்களூரு: பெங்களூருவில் ஓட்டல்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்களில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என்று மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா கூறினார்.
பெங்களூருவில் நேற்று மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
மாநகராட்சியால் சாத்தியமில்லை
பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க வணிக வளாகங்கள், ஓட்டல்கள், தியேட்டர்களில் பணியாற்றுபவர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகளை கட்டாயமாக வணிக வளாகங்கள், தியேட்டர்கள் பின்பற்ற வேண்டும்.
பெங்களூருவில் இதுவரை 90 சதவீதம் பேர் முதற்கட்ட கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். 2-வது டோஸ் தடுப்பூசியை 66 சதவீதம் பேர் செலுத்தி உள்ளனர். கூடிய விரைவில் 70 முதல் 75 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9 பேர் தொடர்பில் உள்ளனர்
ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். ஒமைக்ரான் வைரஸ் பரவுவதை தடுக்க பெங்களூருவில் அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளான 2 பேருடன், 200 பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.
அவர்கள் 200 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு மாநகராட்சியின் கண்காணிப்பில் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பிற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்த 10 பேர் தலைமறைவாகி இருந்தனர். அவர்களில் 9 பேர் தற்போது மாநகராட்சியின் தொடா்பில் உள்ளனர். அவர்களை தனிமைப்படுத்தவும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு கவுரவ் குப்தா கூறினார்.
Related Tags :
Next Story