பள்ளி கட்டிடம் பழுது: அரசு பள்ளி மாணவர்கள் சாலைமறியல்
அரசு பள்ளி மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பெத்தநாயக்கன்பாளையம்,
பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா தும்பல் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வகுப்பறை கட்டிடங்கள் அனைத்தும் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் தண்ணீர் வகுப்பறைக்கு உள்ளே புகுந்து மாணவ-மாணவிகள் அமர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று காலையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி பள்ளியின் எதிரே உள்ள சாலையில் மாணவ, மாணவிகள் அமர்ந்து திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் புதியகட்டிடம் கட்ட அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவ, மாணவிகள் சாலைமறியலை கைவிட்டனர். இந்த மறியல் போராட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story