போலி ஆவணம் தயார் செய்ய உடந்தை: நெல்லையில் சார்பதிவாளர் கைது


போலி ஆவணம் தயார் செய்ய உடந்தை: நெல்லையில் சார்பதிவாளர் கைது
x
தினத்தந்தி 5 Dec 2021 3:46 AM IST (Updated: 5 Dec 2021 3:46 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் சார்பதிவாளர் கைது

நெல்லை:
போலி ஆவணம் தயார் செய்ய உடந்தையாக இருந்ததாக நெல்லையில் சார்பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஆள் மாறாட்டம்
நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி பகவதி (வயது 61) என்பவருக்கு வள்ளியூரில் 5 ஏக்கர் 20 சென்ட் நிலம் உள்ளது.
அந்த இடத்தை பவுல் வினோத் என்பவர் பகவதி போல் ஆள்மாறாட்டம் செய்து, அவரைப்போல வேறு நபரை அழைத்து சென்று போலி ஆவணம் தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடத்தை பவுல் வினோத், அழகேசன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். அதன்பின் அழகேசன் அந்த இடத்தை சுப்பிரமணியனுக்கு விற்பனை செய்துள்ளார்.
கைது
இந்தநிலையில் அந்த இடத்தில் வில்லங்கம் ஏற்பட்டது பற்றி பகவதிக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பகவதி தனது நிலத்தை மீட்டு தருமாறு போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனிடம் புகார் மனு கொடுத்தார். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபால் பர்னபாஸ்க்கு உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், இதற்கு போலி ஆவணங்களை தயார் செய்ய கங்கைகொண்டான் சார்பதிவாளரான பாளையங்கோட்டை ரஹ்மத் நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Next Story