கடையம் அருகே மழையால் வீடு இழந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி
மழையால் வீடு இழந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி
கடையம்:
தொடர் மழையால் கடையம் அருகே வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து லட்சுமியூரில் அருணாசலம், முத்துலட்சுமி ஆகியோரின் வீடுகள் இடிந்தன. இதையடுத்து தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் லட்சுமியூருக்கு சென்று மழையால் வீடு இடிந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி மற்றும் ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கினார். பின்னர் மடத்தூர் பஞ்சாயத்து முத்தம்மாள்புரம் கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை பார்வையிட்ட அவர், அங்கு மேம்பாலம் அமைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். அப்போது ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன், ஊராட்சி மன்ற தலைவர் சாருகலா ரவி, ஊராட்சி துணை தலைவர் சுதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் விரைவில் 10-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. ஏற்கனவே கட்டப்பட்டுள்ள நீதிமன்ற வளாகத்தில் அனைத்து நீதிமன்றங்களுக்கும் போதுமான அறைகள் இல்லை. தற்போது தென்காசியில் 6 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிதாக மேலும் நீதிமன்றங்கள் வரும்போது அதற்கு வசதியாக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அப்போது, தென்காசி நகர தி.மு.க. செயலாளர் சாதிர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story