முக்கூடல் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
முக்கூடல்:
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாகவும், அணைகளில் இருந்து உபரிநீர் அதிகளவில் ஆற்றில் திறந்து விடப்பட்டதாலும் நெல்லை மாவட்டம் முக்கூடல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான குளங்கள் நிரம்பி மறுகால் பாயத்தொடங்கி உள்ளன. இதனால் முக்கூடல் அருகே உள்ள அமர்நாத் காலனி, சிவகாமிபுரம், அண்ணா நகர், நேரு புதுகாலனி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியினர் சிரமப்பட்டு வருகின்றனர்.
நேரு புதுகாலனி பகுதியில் தேங்கிய மழைநீரை முக்கூடல் பேரூராட்சி செயல் அலுவலர் கந்தசாமி முன்னிலையில் பேரூராட்சியினர் மோட்டார் மூலமாக வெளியேற்றி வருகின்றனர். சிவகாமிபுரம், அமர்நாத் காலனி உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பாப்பாக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, பஞ்சாயத்து தலைவர் ஆனைக்குட்டி பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டனர். ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும்போது இதுபோன்று குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து கொள்வதாகவும், எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
.......
Related Tags :
Next Story