வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் பிணமாக மீட்பு
செய்யாற்றில் அடித்துச்செல்லப்பட்டவர் பிணமாக மீட்கப்பட்டார். சம்பந்தப்பட்ட இடத்தில் உயர்மட்ட மேம்பாலம் கட்டக்கோரி இறந்தவர் உடலை ரோட்டில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சேத்துப்பட்டு
செய்யாற்றில் அடித்துச்செல்லப்பட்டவர் பிணமாக மீட்கப்பட்டார். சம்பந்தப்பட்ட இடத்தில் உயர்மட்ட மேம்பாலம் கட்டக்கோரி இறந்தவர் உடலை ரோட்டில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சமையல் தொழிலாளி
திருவண்ணாமலை மாவட்டம் ஆவணியாபுரத்தை அடுத்த விநாயகபுரத்தை ேசர்ந்தவர் பழனி (வயது 65), சமையல் தொழிலாளி.
இவர் நேற்று மாலை 3 மணியளவில் விநாயகபுரம்-பெரிய கொழப்பலூர் இடையே ெசய்யாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் அடித்துச் ெசல்லப்பட்டார்.
தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து வந்து தேடினர். ஆவணியாபுரம் அருகில் இறந்து கிடந்த பழனியின் உடலை மீடடனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பழனியின் உடலை ஆரணி அரசு மருத்துவமனைக்கு பெரணமல்லூர் போலீசார் அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் பழனியின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
அவர்கள் பொதுமக்களுடன் இணைந்து திடீரென இன்று ஆரணி-வந்தவாசி சாலையில் ஆவணியாபுரம் தடுப்பணை அருகில் நடுரோட்டில் பிணத்தை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அவர்கள் விநாயகபுரம்-பெரிய கொழப்பலூர் இடையே செய்யாற்றின் குறுக்ேக உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தனர்.
உயர்மட்ட பாலம் கட்டப்படும்
தகவல் அறிந்த சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச ேபச்சுவார்த்தை நடத்தினர். ெசய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது,
விரைவில் அதற்கான பணி தொடங்கப்படும், என அவர் கூறியதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பழனியின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்து மயானத்துக்கு கொண்டு சென்றனர்.
சாலை மறியல் போராட்டத்தால் இன்று காலை ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story