மூக்குபொடி சித்தர் குரு பூஜை விழா
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மூக்குபொடி சித்தர் குரு பூஜை விழா நடந்தது. இதில் நடிகர் தாடி பாலாஜி பங்கேற்றார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மூக்குபொடி சித்தர் குரு பூஜை விழா நடந்தது. இதில் நடிகர் தாடி பாலாஜி பங்கேற்றார்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வாயுலிங்கம் அருகில் மூக்குபொடி சித்தர் நினைவிடத்தில் இன்று 3-ம் ஆண்டு குரு பூஜை விழா நடைபெற்றது.
இதில் கணபதி பூஜை, குரு பூஜை, மகேஷ்வர பூஜை நடைபெற்றது. பிறகு சாதுகளுக்கு வஸ்திரதானம், சொர்ணதானம், ஆடைதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன.
இதில் போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஜெயராமன், முன்னாள் ஏ.டி.ஜி.பி. மஞ்சுநாத், திரைப்பட நடிகர் தாடி பாலாஜி, திருவண்ணாமலை ஆகாஷ் ஓட்டல் அதிபர் முத்துக்கிருஷ்ணன் உள்பட அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் திரளான பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story