சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு
சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு
பந்தலூர்
கேரளா, கர்நாடகா, தமிழகம் என 3 மாநிலங்கள் இணையும் இடத்தில் கூடலூர், பந்தலூர் தாலுகாக்கள் உள்ளன. இதற்கிடையில் கர்நாடகாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதையொட்டி கூடலூர், பந்தலூர் தாலுகாக்கள் உள்பட நீலகிரி மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி தாளூர், சோலாடி, கக்குண்டி, நம்பியார்குன்னு உள்பட அனைத்து சோதனைச்சாவடிகள் வழியாக நீலகிரிக்குள் நுழையும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. அதில் வருபவர்களுக்கு தடுப்பூசி போடாமல் இருந்தால் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story