சாலையில் ஜீப் கவிழ்ந்து 3 வன ஊழியர்கள் காயம்


சாலையில் ஜீப் கவிழ்ந்து 3 வன ஊழியர்கள் காயம்
x
தினத்தந்தி 5 Dec 2021 7:53 PM IST (Updated: 5 Dec 2021 7:53 PM IST)
t-max-icont-min-icon

சாலையில் ஜீப் கவிழ்ந்து 3 வன ஊழியர்கள் காயம்

கோத்தகிரி

கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டி கிராமத்தில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் கரடியை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. அங்கு வனத்துறையினர் இரவு, பகலாக கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் கட்டபெட்டு வனச்சரக வனவர் பெலிக்ஸ், வனக்காப்பாளர் சைமன், வேட்டைத்தடுப்பு காவலர் கவுதமன் ஆகியோர் கண்காணிப்பு பணியில் இருந்தனர். பின்னர் நேற்று காலை 6 மணிக்கு தங்களது பணியை முடித்து விட்டு வனத்துறை ஜீப்பில் உயிலட்டியில் இருந்து கோத்தகிரி நோக்கி சென்றனர். ஜீப்பை கவுதமன் ஒட்டினார். பாண்டியன் நகர் அருகே சென்றபோது பனிமூட்டம் அதிகமாக இருந்த சமயத்தில் திடீரென சாலையின் குறுக்கே காட்டெருமை ஒன்று வந்தது. 

உடனே காட்டெருமை மீது மோதாமல் இருக்க கவுதமன் பிரேக் போட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வனவர் பெலிக்சின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்ற 2 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. வனவர் பெலிக்ஸ் மட்டும் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


Next Story