சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து


சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து
x
தினத்தந்தி 5 Dec 2021 7:53 PM IST (Updated: 5 Dec 2021 7:53 PM IST)
t-max-icont-min-icon

சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

பந்தலூர்

பந்தலூர் அருகே உள்ள அய்யன்கொல்லியில் இருந்து மிளகு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கூடலூர் நோக்கி லாரி சென்று கொண்டு இருந்தது. நெலாக்கோட்டை 9-வது மைல் அருகே சென்றபோது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. தொடர்ந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நெலாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய லாரியை மீட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.


Next Story