ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவ பொம்மை எரிப்பு
வேலூர் மாவட்டம் பா.ஜ.க. இளைஞர் அணி சார்பில் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியாத்தம்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் குறித்து தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவதூறாக பேசியதை கண்டித்து வேலூர் மாவட்டம் பா.ஜ.க. இளைஞர் அணி சார்பில் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் கே.ஜி.சுரேஷ் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் கனிமொழி, திருமாறன், சதீஷ், கிஷோர், மாரியப்பன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவணன், பொருளாளர் முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பா.ஜ.க தலைவர் வாகீஸ்வரன் வரவேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் குமார், மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த், மாவட்ட செயலாளர் முருகேசன், துணைத் தலைவர்கள் ஜெகன் சிவக்குமார் தெற்கு ஒன்றிய தலைவர் நந்தகோபால், நகர பொதுச் செயலாளர் ஆறுமுகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் முடிவில் நகர இளைஞரணி தலைவர் கோபிநாத் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் திடீரென ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் கொடும்பாவியை எரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று கொடும்பாவி எரிக்கப்பட்டதை அணைத்தனர்.
Related Tags :
Next Story