ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு. மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை


ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு. மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை
x
தினத்தந்தி 5 Dec 2021 8:06 PM IST (Updated: 5 Dec 2021 8:06 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு

ஜோலார்பேட்டை

பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று (திங்கட்கிழமை) அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் நேற்று தீவிரகண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஜோலார்பேட்டை வழியாக வந்த அனைத்து ரெயில்களிலும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர். மேலும் தண்டவாளங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அதேபோன்று ரெயில்பயணிகள் கொண்டு வந்த பைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் சோதனை செய்தனர். மேலும் ஜோலார்பேட்டையில் இருந்து காட்பாடி வரை உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் அவ்வழியாக செல்லும் ரெயில்களிலும் ரெயில்வே போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story