மின் வேலியில் சிக்கி தொழிலாளி பலி


மின் வேலியில் சிக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 5 Dec 2021 8:06 PM IST (Updated: 5 Dec 2021 8:06 PM IST)
t-max-icont-min-icon

மின் வேலியில் சிக்கி தொழிலாளி பலி

சோளிங்கர்

சோளிங்கரை அடுத்த கேசவனாங்குப்பம் ஊராட்சிக்கு‌ உட்பட்ட மேட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம் (வயது 38).. சாக்கு பை தைக்கும் தைக்கும் தொழிலாளி. அருகில் உள்ள வனப்பகுதியில் ஷெட் அமைத்து சாக்கு பை தைத்து வந்தார். வழக்கம்போல நேற்று காலை 6 மணிக்கு சாக்கு பை தைக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள விவசாய நிலத்தில் காட்டுப் பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் எதிர்பாராதவிதமாக சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். 

இதுகுறித்து அவரது மனைவி தனலட்சுமி சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவகுமார் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story