காரில் கடத்திய ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல். கார் உரிமையாளர், டிரைவர் கைது
காரில் கடத்திய ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல். கார் உரிமையாளர், டிரைவர் கைது
அணைக்கட்டு
காரில் குட்கா கடத்தப்படுவதாக வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு கிடைத்த தகவலின்பேரில், அவரது உத்தரவின்படி பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் நேற்றமு முன்தினம் இரவு 10 மணியளவில் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காரை போலீசார் நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அதற்கு அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக கூறியதால் காரின் பின்பக்க கதவை திறந்து பார்த்தபோது மூட்டைகளில் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்ததில் காரில் இருந்தவர் ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் சாதிக்பாஷா நகரை சேர்ந்த ஜான் பாஷா என்பவரின் மகன் அப்சல் பாஷா (வயது29), கார் உரிமையாளர் என்பதும், காரை ஓட்டிவந்தது வேலூரை அடுத்த பலவன் சாத்து பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த காதர்கான் மகன் ஜாபர்கான் (26) என்பதும் தெரியவந்தது.
மேலும் இவர்கள் காரில் 278 கிலோ கொண்ட தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பெங்களூருவில்ல் இருந்து வேலூருக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிருசெய்து அப்சல் பாஷா மற்றும் ஜாபர் கான் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
காரில் கடத்திவரப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story