திருக்கோவிலூரில் பா ஜ க வினர் ஆர்ப்பாட்டம்
திருக்கோவிலூரில் பா ஜ க வினர் ஆர்ப்பாட்டம் பெட்ரோல் டீசல் மீதான வரிகளை தமிழக அரசு குறைக்க கோரிக்கை
திருக்கோவிலூர்
தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைத்து உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருக்கோவிலூர் 5 முனை சந்திப்பு காந்திசிலை அருகில் திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.க. ஊடக பிரிவு தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் வீ.ஏ.டி.கலிவரதன், மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில்குமார், விழுப்புரம் மாவட்ட தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு பார்வையாளர் ஜீவாவசந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்கோவிலூர் ஒன்றிய பொதுச்செயலாளர் சதீஷ் வரவேற்றார்.
இதில் முகையூர் ஒன்றிய தலைவர்கள் தங்கராஜ், பரதன், முனியப்பன், திருக்கோவிலூர் ஒன்றிய நிர்வாகி ராஜாஜி, ஒன்றிய துணைத் தலைவர் மதன்ராஜ், செயலாளர் ராயல் பாலு, அய்யப்பன், சக்திவேல், ராமகிருஷ்ணன், சண்முகவடிவேல், மகளிர் அணி தலைவி புவனேஸ்வரி, மாவட்ட துணைத்தலைவர் அலமேலு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் பத்ரி நாராயணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story