குண்டடம் பகுதியில் நடப்பாண்டில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.


குண்டடம் பகுதியில் நடப்பாண்டில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.
x
தினத்தந்தி 5 Dec 2021 9:50 PM IST (Updated: 5 Dec 2021 9:50 PM IST)
t-max-icont-min-icon

குண்டடம் பகுதியில் நடப்பாண்டில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்

குண்டடம்,
குண்டடம் பகுதியில் நடப்பாண்டில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.
பருத்தி சாகுபடி
கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வரை குண்டடம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வந்தது. கரிசல் மண்ணில் பருத்தி அபாரமாக விளையும் என்பதால் விவசாயிகள் பருத்தியை பணப்பயிராக கருதி சாகுபடி செய்து வந்தனர்.
பின்னர் தண்ணீர் பற்றாக்குறை, பருத்தி பறிக்க ஆள் கிடைக்காமை, போதிய விலையின்மை உள்ளிட்ட காரணங்களால் பருத்தி சாகுபடி செய்வது இந்த பகுதிகளில் படிப்படியாக குறைந்தது. பல ஆயிரக்கணக்கான ஏக்கர் என்ற நிலை மாறி ஆங்காங்கே ஒரு சில ஏக்கரில் சாகுபடி என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டில் குண்டடம் பகுதியில் சிங்காரிபாளையம், எரகாம்பட்டி, ஓட்டபாளையம், உப்பாறு அணை, பனைமரத்துபளையம், தேர்பாதை, கெத்தல்ரேவ் உள்ளிட்ட கிராமங்களில் பல 100 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.
எதிர்பார்த்த மகசூல்
இது பற்றி சிங்காரிபாளையத்தை சேர்ந்த பருத்தி விவசாயி செல்வராஜ் கூறியதாவது:-
பல வருடங்களுக்கு பின்னர் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அளவில் பருத்தி சாகுபடி செய்துள்ளோம். முன்புபோல அல்லாமல் பி.டி. ரக பருத்தியைத்தான் சாகுபடி செய்துள்ளோம். பி.டி.ரகம் என்பதால் காய்புழுக்கள் தாக்குதல் அதிகம் இல்லை. இருப்பினும் பூச்சி தாக்குதல் அதிகம் உள்ளதால் 6 முறை மருந்து தெளிக்க வேண்டியுள்ளது.
உரம், உழவு, ஆட்கள் கூலி என ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் செலவு செய்ய வேண்டியுள்ளது. நல்ல முறையில் விளைச்சல் இருந்தால் ஏக்கருக்கு 17 குவிண்டால் மகசூல் கிடைக்கும். இந்த ஆண்டு செடிகளில் நல்ல முறையில் காய்கள் பிடித்துள்ளதால் பனிபொழிவின் பாதிப்பு ஏற்படாமல் இருந்தால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோல் பருத்திக்கு நல்ல விலை கிடைக்குமானால் நல்ல லாபம் கிடைக்கும் என்றார்.

Next Story