விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஐ.ஜி. பாண்டியன் ஆய்வு


விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டி.ஐ.ஜி. பாண்டியன் ஆய்வு
x
தினத்தந்தி 5 Dec 2021 9:51 PM IST (Updated: 5 Dec 2021 9:51 PM IST)
t-max-icont-min-icon

ஆய்வு

விருத்தாசலம், 

விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அங்கு விருத்தாசலம், ஆலடி, மங்கலம்பேட்டை, பெண்ணாடம், கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி ஆகிய போலீஸ் நிலையங்களில் உள்ள குற்ற வழக்குகள் தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டதுடன், போலீசார் வருகை பதிவேடு ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கிருந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களிடம் புகார் கொடுக்க காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்வதோடு, எனவும் டி.ஐ.ஜி.பாண்டியன் அறிவுறுத்தினார். ஆய்வின்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின், இன்ஸ்பெக்டர்கள் விஜயரங்கன், விஜயக்குமார், குமார், ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கமல்ஹாசன், பொட்டா, பாக்கியராஜ், தனிப்பிரிவு போலீஸ்காரர் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story