கனமழை பெய்து வருவதால் தடுப்பணைகள் நிரம்பி உள்ளது


கனமழை பெய்து வருவதால் தடுப்பணைகள் நிரம்பி உள்ளது
x
தினத்தந்தி 5 Dec 2021 9:52 PM IST (Updated: 5 Dec 2021 9:52 PM IST)
t-max-icont-min-icon

கனமழை பெய்து வருவதால் தடுப்பணைகள் நிரம்பி உள்ளது

குமரலிங்கம்,
மடத்துக்குளம் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருவதால் தடுப்பணைகள் நிரம்பி உள்ளது. ஆகவே சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர் மழை
மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளான கணியூர், கிருஷ்ணாபுரம், வேடபட்டி, துங்காவி சோழமாதேவி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தடுப்பணைகள் தண்ணீர் குளம் போல் நிரம்பி வழிந்து வருகிறது.
மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளன. இவை அனைத்துமே நிரம்பியுள்ளதால் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் நன்றாகவே உயர்ந்து வருகிறது. மேலும் மடத்துக்குளம் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. 
நிரம்பிய தடுப்பணைகள்
இவற்றில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் தக்காளி, கத்தரி, புடலை போன்ற காய்கறி பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தடுப்பணைகளில் தேங்கி நிற்கும் மழைநீரால் தோட்டத்து கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 
மேலும் கோடைக்காலங்களில் தடுப்பணைகளில் உள்ள மழைநீரை பயன்படுத்தியும் சாகுபடி செய்யலாம் என்பதால் அந்தப் பகுதி விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story