ஆசிரியர் பணியிடை நீக்கம்
ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடி அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் ராமநாதபுரம் நாகாச்சியை சேர்ந்த சந்திரன் (வயது 52) என்பவர் வாட்ஸ்-அப் மூலமாக ஆசிரியை ஒருவருக்கு ஆபாச தகவல்களை அனுப்பி வந்துள்ளார். இதுகுறித்து அந்த ஆசிரியை சத்திரக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் சத்திரக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் சந்திரனை கைது செய்தார். இச்சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலு முத்து விசாரணை நடத்தி ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சந்திரனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story