சின்னசேலம் அருகே லாரி டிரைவர் மர்ம சாவு கொலையா போலீசார் விசாரணை
சின்னசேலம் அருகே லாரி டிரைவர் மர்ம சாவு கொலையா போலீசார் விசாரணை
சின்னசேலம்
சின்னசேலம் அருகே கீழ்குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தன்(வயது 33), லாரி டிரைவரான இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், மோனிஷா(3) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை நைனார்பாளையம் சென்று வருவதாககூறி சென்ற கோவிந்தன் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். பின்னர் கோவிந்தனின் செல்போனை தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.
இந்த நிலையில் கீழ்குப்பம் வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதி முனியப்பன் கோயில் அருகே ராமச்சந்திரன் என்ற விவசாயி நிலத்தில் கோவிந்தன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றிய தகவல் அறிந்து சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து கோவிந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story