மின்சார பாதையில் ரெயில் இயக்கி பாதுகாப்பு ஆணையர் ஆய்வு


மின்சார பாதையில் ரெயில் இயக்கி பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Dec 2021 10:52 PM IST (Updated: 5 Dec 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை- மதுரை இடையே மின்சார பாதையில் ரெயில் இயக்கி பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார்.

மானாமதுரை, 
மானாமதுரை- மதுரை இடையே மின்சார பாதையில் ரெயில் இயக்கி பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்தார்.
 ஆய்வு
மானாமதுரை- மதுரை இடையேயான மின்சார ரெயில் பாதையை தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் ஆய்வு செய்ய மதுரையில் இருந்து நேற்று சிறப்பு ரெயில் மூலம் மானாமதுரை வந்தார்.
மதுரையில் இருந்து  சிலைமான், திருப்புவனம், திருப் பாசேத்தி, ராஜகம்பீரம், மானாமதுரை ரயில்வே மின்வழி பாதை ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் மானாமதுரையில் ஆய்வை முடித்து விட்டு மானாமதுரை ெரயில் நிலையத்தில் இருந்து மதுரை சோதனை ஓட்டம் தொடங்கும் முன் பூஜை செய்யப்பட்டு 8 பெட்டிகளுடன் ெரயில் இயக்கி ஆய்வு செய்யப்பட்டது.
மின்மயம்
 இதில் ெரயில்வே பாதுகாப்பு ஆணையருடன் முதன்மை மின்வழி திட்ட இயக்குனர் சமீர், கூடுதல் கோட்ட  மேலாளர்  ரமேஷ் பாபு, முதுநிலை கோட்ட மின்மயமாக்கல் பொறியாளர் பச்சு ரமேஷ், கோட்ட பாதுகாப்பு அதிகாரி மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். 
பின்னர்  பாதுகாப்பு ஆணையர் கூறியதாவது:- மின்சார ெரயிலை இந்த பகுதியில் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் இயக்கி பார்த்து, அதற்கான அறிக்கையை ெரயில்வே உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்போம். ெரயில் பாதை முழுவதும் மின்மயமாக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக ஒவ்வொரு பகுதியாக முடிவடைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story