ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் நகை திருட்டு


ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் நகை திருட்டு
x
தினத்தந்தி 5 Dec 2021 11:39 PM IST (Updated: 5 Dec 2021 11:39 PM IST)
t-max-icont-min-icon

ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் நகை திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூர் மடத்துபட்டி தெருவை சேர்ந்தவர் சிவகுருநாதன் (வயது 60). இவர் மும்பையில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தனது குடும்பத்தினருடன் பெங்களூருக்கு சென்று இருந்தார். இதற்கிடையே அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் சிவகுருநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் பெங்களூரிலிருந்து புறப்பட்டு வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 5 பவுன் மதிப்புள்ள 10 ஜோடி கம்மல்கள், வெள்ளி குத்துவிளக்கு, வெண்கல விநாயகர் சிலை உள்பட பல்வேறு பொருட்கள் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வீரச்சோலை விசாரணை நடத்தினார். ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்தூரில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 14 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது ஓய்வு பெற்ற பேராசிரியர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story