புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Dec 2021 11:54 PM IST (Updated: 5 Dec 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூரில் புரட்சி பாரதம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் தாலுகா அலுவலகம் அருகில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பூவை ஆறுமுகம் தலைமை தாங்கினார். இந்திய குடியரசு கட்சி மாவட்ட செயலாளர் குமார் கண்டன உரையாற்றினார்.  திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவை தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. மாவட்ட  வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் வக்கீல் பிரேம்குமார், சமூகநீதி மக்கள் விடுதலை முன்னணி தலைவர் வேலு, பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் பஞ்சவர்ணம், மாவட்ட செயலாளர் சுபாஷ் மற்றும் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story