பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரை பணியமர்த்த வேண்டும்
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரை அதே பள்ளியில் பணியமர்த்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர்,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கரூர் மாவட்ட கிளையின் அவசர செயற்குழு கூட்டம் தாந்தோணிமலையில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ராஜா, மாநில கொள்கை பரப்பு செயலாளர் பரணிதரன், மாவட்ட செயலாளர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பாகநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் பன்னீர்செல்வத்தை பணியிடை நீக்கம் செய்ததை ரத்து செய்து, மீண்டும் அவருக்கு அதே பள்ளியில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story