மகனுக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் பஸ் டிரைவர் விபத்தில் சாவு
திருவட்டார் அருகே நடந்த விபத்தில் காயம் அடைந்த அரசு பஸ் டிரைவர் இறந்தார். மகனுக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்தது.
திருவட்டார்:
திருவட்டார் அருகே நடந்த விபத்தில் காயம் அடைந்த அரசு பஸ் டிரைவர் இறந்தார். மகனுக்கு அடுத்த வாரம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்தது.
இந்த பரிதாப விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
அரசு பஸ் டிரைவர்
வேர்க்கிளம்பியை அடுத்த மாவறவிளையை சேர்ந்தவர் லாரன்ஸ் (வயது 58). இவர் அரசு போக்குவரத்து கழக திருவட்டார் பணிமனையில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கிளாடிஸ். இவர்களுக்கு பியூட்லின் கிளிண்டன்ஸ் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் மகனுக்கு வருகிற 13-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது.
இந்தநிலையில் சம்பவத்தன்று அதிகாலை 5.30 மணிக்கு மாவறவிளையில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருவட்டாருக்கு வேலைக்கு சென்றுள்ளார். மாத்தார் அருகே செல்லும் போது, நாகர்கோவிலுக்கு புறப்பட்டு வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரன்ஸ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
சாவு
ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆற்றூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவில் லாரன்ஸ் இறந்தார். இந்த விபத்து குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகனுக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் லாரன்ஸ் விபத்தில் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story