கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்பு
கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிருடன் மீட்கப்பட்டார்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஜெமீன்பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகள் சுதா(வயது 28). சின்னசாமி ஏற்கனவே இறந்துவிட்டார். இதையடுத்து தனது தாய் கலியம்மாளுடன் சுதா வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சுதா, ஜமீன் பேரையூர் ஏரிக்கரையோரம் உள்ள தண்ணீர் இல்லாத 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தார். இதுகுறித்து வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்து தண்ணீரில்லாத கிணற்றில் கயிறு கட்டி இறங்கி சுதாவை உயிருடன் மீட்டனர். இதையடுத்து சுதா 108 ஆம்புலன்சில் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story