சாராயம் விற்ற 2 பேர் கைது
சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெருநிலா கிராமத்தில் சாராயம் விற்கப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான போலீசார் பெருநிலா பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி குடிநீர் கிணறு அருகே காரியானூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 37), செந்தில் (48) ஆகிய 2 பேர் சாராயம் விற்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த 10 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story