கஞ்சா விற்ற சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது


கஞ்சா விற்ற சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 6 Dec 2021 1:09 AM IST (Updated: 6 Dec 2021 1:09 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜெயங்கொண்டம்:

போலீசார் சோதனை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு(பயிற்சி) சங்கர் கணேஷ் தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கீழக்குடியிருப்பு விருத்தாசலம் ரோட்டிற்கு அருகே தனியார் திருமண மண்டபத்திற்கு பின்புறம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அங்கு சென்று சோதனையிட்டனர்.
அப்போது அங்கு 3 பேர் மறைத்து வைத்து கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதில் அவர்கள் ஜெயங்கொண்டம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் செந்தில்(வயது 32) மற்றும் தலா 17 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது.
3 பேர் கைது
இதையடுத்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.18 ஆயிரத்து 180 மதிப்புள்ள ஒரு கிலோ 100 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நடுவர் சுப்பிரமணியன், அவர்கள் 3 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story