குமரிக்கு வந்த 2 கொரோனா நோயாளிகளுக்கு ஒமைக்ரான் தொற்று இல்லை


குமரிக்கு வந்த 2 கொரோனா நோயாளிகளுக்கு  ஒமைக்ரான் தொற்று இல்லை
x
தினத்தந்தி 6 Dec 2021 1:41 AM IST (Updated: 6 Dec 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் இருந்து குமரிக்கு வந்த 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

நாகர்கோவில்:
வெளிநாட்டில் இருந்து குமரிக்கு வந்த 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.
உருமாற்றம் அடைந்த கொரோனா
உருமாற்றம் அடைந்த கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. எனவே தமிழகத்தில் வைரஸ் பரவாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களில் சளி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுபோக ஒவ்வொரு மாவட்டங்களிலும் நோய் தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
குமரி மாவட்ட நிர்வாகம் சார்பிலும் ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முக்கியமாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க களியக்காவிளை மற்றும் காக்கவிளை போன்ற இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சளி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாதவர்களுக்கும் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.
ஒமைக்ரான் தொற்று இல்லை
இந்த நிலையில் குமரி மாவட்டத்துக்கு அமெரிக்காவில் இருந்து வந்த ஒருவருக்கும், சிங்கப்பூரில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து 2 பேரின் சளி மாதிரியும் ஒமைக்ரான் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
இதில் அமெரிக்காவில் இருந்து வந்தவருக்கு பரிசோதனை முடிவுகள் வந்துவிட்டது. அதில் அவருக்கு ஒமைக்ரான் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. சாதாரண கொரோனா தொற்றால் தான் பாதிக்கப்பட்டு இருந்ததும் கண்டறியப்பட்டது.
இதற்கிடையே நேற்று முன்தினம் மதுரை விமான நிலையத்தில் வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது சளி மாதிரி ஒமைக்ரான் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவருக்கும் ஒமைக்ரான் தொற்று இல்லை என்பது உறுதியானது.

Next Story