பெண்ணுக்கு பாலியல் தொல்லை; அரசு டாக்டர் மீது புகார்


பெண்ணுக்கு பாலியல் தொல்லை; அரசு டாக்டர் மீது புகார்
x
தினத்தந்தி 6 Dec 2021 2:25 AM IST (Updated: 6 Dec 2021 2:25 AM IST)
t-max-icont-min-icon

ஸ்கேன் எடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு டாக்டர் மீது புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

மதுரை,

ஸ்கேன் எடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு டாக்டர் மீது புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை

மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 26 வயது இளம்பெண் ஒருவர் ஸ்கேன் பரிசோதனைக்காக வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த ரேடியாலஜி டாக்டர் ஒருவர் ஸ்கேன் செய்வதாக கூறி அந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
மறுநாள் மீண்டும் பரிசோதனைக்காக வந்த அந்த பெண்ணிற்கு, மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது இதுகுறித்து அந்த இளம்பெண் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

புகார்

இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல் மற்றும் ரேடியாலஜி துறை தலைவரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை சென்னை மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானால் சம்பந்தப்பட்ட டாக்டர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story