சேலம் கிழக்கு கோட்டத்தில் தபால் துறை சார்பில் ஆயுள் காப்பீட்டு சிறப்பு சேவை முகாம்-கண்காணிப்பாளர் தகவல்
சேலம் கிழக்கு கோட்டத்தில் தபால் துறை சார்பில் ஆயுள் காப்பீட்டு சிறப்பு சேவை முகாம் நடைபெற உள்ளது என்று கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டத்தில் வருகிற 13, 14 மற்றும் 15-ந் தேதிகளில் அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான சிறப்பு சேவை முகாம் நடைபெற உள்ளது. தபால் துறை ஆயுள் காப்பீட்டின் தனிச்சிறப்புகளான இந்திய ஜனாதிபதி பெயரால் வழங்கப்படும் சேமிப்புடன் கூடிய பாதுகாப்பு திட்டம். குறைந்த பிரீமியம், அதிக போனஸ் கிடைக்கும். வருமான வரி விலக்கு உண்டு. இக்கட்டான தருணங்களில் இருந்து மீள கடன் பெறும் வசதி. இந்திய அரசாங்கத்திற்கும், பாலிசிதாரருக்கும் நேரடி ஒப்பந்தம். இந்தியாவில் அனைத்து தபால் அலுவலகத்திலும் பிரீமியம் செலுத்தும் வசதி மற்றும் ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி இருக்கிறது.
முதிர்வு தொகையை இந்தியாவில் எந்த அஞ்சலகத்திலும் பெறும் வசதி. அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 லட்சம் வரை காப்பீடு செய்து கொள்ளும் வசதியும், பிரீமியம் தொகையை மாதம், காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டிற்கு ஒருமுறை செலுத்தும் வசதியும், அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலில் பிடித்தம் செய்து நேரடியாக கருவூலம் மூலம் செலுத்துவதால் 100 சதவீதம் பாதுகாப்பானதாக இருக்கும். எனவே வருமான வரி விலக்கு விரும்புவோர்கள் இந்த சிறப்பு முகாம் நாட்களில் அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகி அஞ்சல் ஆயுள் காப்பீட்டில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story