ஓமலூர் அருகே, அனுமதியின்றி இயங்கிய கிரானைட் ஏற்றுமதி நிறுவனத்துக்கு ‘சீல்’-ரூ.15 லட்சம் கிரானைட் கற்கள், கன்டெய்னர் லாரி, எந்திரங்கள் பறிமுதல்


ஓமலூர் அருகே, அனுமதியின்றி இயங்கிய கிரானைட் ஏற்றுமதி நிறுவனத்துக்கு ‘சீல்’-ரூ.15 லட்சம் கிரானைட் கற்கள், கன்டெய்னர் லாரி, எந்திரங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 6 Dec 2021 2:57 AM IST (Updated: 6 Dec 2021 2:57 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூர் அருகே அனுமதியின்றி இயங்கிய கிரானைட் ஏற்றுமதி நிறுவனத்துக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் ரூ.15 லட்சம் கிரானைட் கற்கள், கன்டெய்னர் லாரி மற்றும் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஓமலூர்:
ஓமலூர் அருகே அனுமதியின்றி இயங்கிய கிரானைட் ஏற்றுமதி நிறுவனத்துக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் ரூ.15 லட்சம் கிரானைட் கற்கள், கன்டெய்னர் லாரி மற்றும் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கிரானைட் நிறுவனம்
ஓமலூரை அடுத்த கொங்குப்பட்டி ஊராட்சி பெரிய கொம்பனூர் பகுதியில் உரிய அனுமதியின்றி எஸ்.ஏ. ஸ்டோன் என்ற பெயரில் கிரானைட் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருவதாக மேட்டூர்  உதவி கலெக்டர் வீர் பிரதாப்சிங்குக்கு தகவல் வந்தது. 
இதையடுத்து அவர் தலைமையில், காடையாம்பட்டி தாசில்தார் அருள் பிரகாஷ், தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி செல்வம் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். 
அப்போது அந்த கிரானைட் நிறுவனத்தை அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 50) என்பவர் நடத்தி வருவதும், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவருக்கு நங்கவள்ளி சின்ன சோரகை கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் குவாரி உரிமம் 2016-ம் ஆண்டில் இருந்து புதுப்பிக்கப்படாமல் உள்ளது.
கன்டெய்னர் லாரி பறிமுதல்
இந்த நிலையில் உயர் ரக கிரானைட் கற்களை அங்கிருந்து கடத்தி வந்து கொங்குப்பட்டி பெரிய கொம்பனூர் பகுதியில் கிரானைட் நிறுவனத்தில் பாலீஷ் செய்து ஏற்றுமதி செய்து வருவதும் தெரியவந்தது. 
மேலும் அந்த நிறுவனத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கன்டெய்னர் லாரியில் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அதில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பாலீஷ் செய்யப்பட்ட கிரானைட் கற்கள் வெளிநாட்டு்க்கு ஏற்றுமதி செய்ய தயராக லோடு ஏற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது. 
இதையடுத்து கன்டெய்னர் லாரியுடன், ரூ.15 லட்சம் மதிப்பிலான கிரானைட் கற்களும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பாலீஷ் செய்யும் 10 எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
‘சீல்’வைப்பு
இதைத்தொடர்ந்து கிரானைட் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக கொங்குப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மாரி, தீவட்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
மேலும் நிறுவன வளாகத்தில் மலைபோல் கிரானைட் பாறைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதை ஆய்வு செய்ய மேட்டூர் உதவி கலெக்டர் வீர் பிரதாப்சிங், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபின் அங்கு வெட்டி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பது முழுமையாக தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓமலூர் அருகே அனுமதியின்றி இயங்கிய கிரானைட் நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story