இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: நெல்லையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு
நெல்லை:
இன்று (திங்கட்கிழமை) பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் நெல்லையில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாபர் மசூதி இடிப்பு தினம்
தமிழகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) பாபர் மசூதி இடிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அதனை முன்னிட்டு நெல்லையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு ரெயில்வே போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில், தண்டவாளங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
அங்கு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் மோப்பநாய் மூலம் சந்திப்பு ரெயில் நிலையத்தில் தண்டவாளங்களில் சோதனை நடத்தினர். ரெயில் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது.
மெட்டல் டிடெக்டர்
மேலும் ரெயிலில் வந்து இறங்கும் பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.
இதேபோல் பிரசித்தி பெற்ற நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே கோவிலின் உள்ளே அனுமதிக்கின்றனர்.
மாவட்டம் முழுவதிலும் முக்கியமான பெரிய கோவில்கள், மசூதிகள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மாநகர பகுதியில் வண்ணார்பேட்டை, சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
...........
Related Tags :
Next Story