ஆத்தங்கரை பள்ளிவாசலில் தரைப்பாலங்களை மழைவெள்ளம் சூழ்ந்தது கயிறு கட்டி பொதுமக்கள் கடந்தனர்
தரைப்பாலங்களை மழைவெள்ளம் சூழ்ந்தது
திசையன்விளை:
ஆத்தங்கரை பள்ளிவாசலில் தரைப்பாலங்களை மழைவெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் கயிறு கட்டி கடந்தனர்.
பலத்த மழை
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் தரைப்பாலம் வழியாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக நம்பியாற்று அணை உபரிநீர் சென்று வீணாக கடலில் கலந்து வருகிறது. தரைபாலத்தில் தண்ணீர் அதிகமாக செல்வதால் மாற்றுப்பாதை வழியாக பள்ளிவாசலுக்கு சென்று வந்தனர்.
நேற்று முன்தினம் பெய்த பலத்த மழை காரணமாக வள்ளியூர் பெரியகுளத்தின் உபரிநீர் அருகில் உள்ள மற்ற குளங்கள் நிரம்பி ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு செல்ல மாற்றுப்பாதையாக பயன்படுத்தி வந்த மற்றொரு தரைப்பாலம் வழியாக கடலில் சென்று கலக்கிறது.
வெள்ளம் சூழ்ந்தது
வள்ளியூர் பெரியகுள உபரிநீர் அதிகமாக வருவதால் ஏற்கனவே மாற்றுப்பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்த தரைப்பாலம் வழியாக ஆள் இறங்க முடியாத அளவிற்கு தண்ணீர் செல்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் மட்டுமே செல்கிறது. தரைப்பாலத்தை கடந்து செல்ல கயிறு கட்டப்பட்டு உள்ளது. இதனால் கயிரை பிடித்தபடி பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்கிறார்கள்.
வள்ளியூர் பெரியகுளம் உபரிநீர் செல்லும் வழியில் ஆத்தங்கரை பள்ளிவாசல் அருகே 27 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதில் நீர்ப்பிடிப்பு குளம் அமைத்தால் கடலில் வீணாக சென்று கலக்கும் தண்ணீரை தடுப்பது மட்டுமின்றி அப்பகுதி விவசாய நிலங்களும் பயன்பெறும் என 7 ஓடை விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.
..........
Related Tags :
Next Story