விவசாயி திடீர் சாவு


விவசாயி திடீர் சாவு
x
தினத்தந்தி 6 Dec 2021 3:40 AM IST (Updated: 6 Dec 2021 3:40 AM IST)
t-max-icont-min-icon

விவசாயி திடீர் சாவு

இட்டமொழி:
வடக்கு விஜயநாராயணம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 50). விவசாயி. இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் தனக்கு சொந்தமான வயலில் தட்சிணாமூர்த்தி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்ததாக தெரிகிறது அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தட்சிணாமூர்த்தி நேற்று காலை பரிதாபமாக உயிர் இழந்தார். வடக்கு விஜயநாராயணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story