கரிவலம்வந்தநல்லூரில் டாஸ்மாக் கடையை சூழ்ந்த மழைநீர் மதுப்பிரியர்கள் அவதி


கரிவலம்வந்தநல்லூரில் டாஸ்மாக் கடையை சூழ்ந்த மழைநீர் மதுப்பிரியர்கள் அவதி
x

டாஸ்மாக் கடையை சூழ்ந்த மழைநீர்

சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்தது. இதில் நிட்சேப நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்தநிலையில் கரிவலம்வந்தநல்லூரில் அமைந்துள்ள அரசு மதுபானக்கடையை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.
சென்னிகுளம் அருகே உள்ள ரெயில்வே பாலத்தின் அடியில் மழைநீர் தேங்கியதால் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்று செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

Next Story