ஆழியாறு குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி


ஆழியாறு குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி
x
தினத்தந்தி 6 Dec 2021 10:57 AM IST (Updated: 6 Dec 2021 10:57 AM IST)
t-max-icont-min-icon

ஆழியாறு குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி

பொள்ளாச்சி

தண்ணீர் வரத்து குறைந்ததால் ஆழியாற்று குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

குரங்கு நீர்வீழ்ச்சி

 பொள்ளாச்சி அருகே ஆழியாறில் முக்கிய சுற்றுலா தலமான குரங்கு நீர்வீழ்ச்சி (கவியருவி) உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட பிறமாநிலங்கள் மற்றும் கேரளா பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். 

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஆழியாறு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் நலன் கருதி குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். 

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

இந்த நிலையில் மழை குறைந்தால், நேற்று காலை முதல் நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு இடங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் குரங்கு நீர்வீழ்ச்சியில் குடும்பத்துடன் ஆனந்த குளியல் போட்டனர். 

சிலர் அந்த பகுதியில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு பிறகு குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது மகிழ்ச்சி தருவதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். குரங்கு நீர்வீழ்ச்சி பகுதியில் அசம்பாவித சம்பவம் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கு ஆழியாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Next Story