மொரப்பூர் அருகே எம்வெளாம்பட்டியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு பொன்னான் ஏரி நிரம்பியது சாமிகளுக்கு பூஜை செய்து பொதுமக்கள் வழிபாடு


மொரப்பூர் அருகே எம்வெளாம்பட்டியில்  25 ஆண்டுகளுக்கு பிறகு பொன்னான் ஏரி நிரம்பியது  சாமிகளுக்கு பூஜை செய்து பொதுமக்கள் வழிபாடு
x
தினத்தந்தி 6 Dec 2021 11:52 AM IST (Updated: 6 Dec 2021 11:52 AM IST)
t-max-icont-min-icon

மொரப்பூர் அருகே எம் வெளாம்பட்டியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு பொன்னான் ஏரி நிரம்பியதால் சாமிகளுக்கு பூஜை செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.

மொரப்பூர்:
மொரப்பூர் அருகே எம்.வெளாம்பட்டியில் பொன்னான் ஏரி உள்ளது. சமீபத்தில் பெய்த தொடர் கனமழையால் 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் வேடியப்பன், பெருமாள், மாரியம்மன் ஆகிய சாமிகளை ஊர்வலமாக ஏரி கரைக்கு எடுத்துச் வந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இதில் கிராமமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.ஏரி நிரம்பியதன் மூலம் சுற்று வட்டார பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன் கால்நடைகளுக்கு குடிநீர் பிரச்சினையும் தீரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Next Story