மொரப்பூர் அருகே தாமலேரிப்பட்டியில் ஏரி உடைந்து வயல்களில் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் சேதம்

மொரப்பூர் அருகே தாமலேரிப்பட்டியில் ஏரி உடைந்து வயல்களில் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் சேதமடைந்தது.
மொரப்பூர்:
மொரப்பூர் அருகே உள்ள கீழ்மொரப்பூர் ஊராட்சிக்கு உட்பட்டது தாமலேரிப்பட்டி. இங்கு தென்பெண்ணையாற்றை ஒட்டி வனப்பகுதியில் ஏரி உள்ளது. தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடந்த வாரம் ஏரி நிரம்பியது. இந்த நிலையில் உபரிநீர் வெளியேறும் பகுதியில் நேற்று காலை உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஏரியில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வயல்களில் புகுந்தது. இதில் நெல், பருத்தி, மரவள்ளிக்கிழங்கு, மஞ்சள், கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story