தளி அருகே விவசாய நிலங்களில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம் வனப்பகுதிக்கு விரட்டும் பணி தீவிரம்
தளி அருகே கிராமங்களில் விவசாய நிலங்களில் புகுந்து 6 காட்டுயானைகள் பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதனை வனத்துறையினர் வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை:
தளி அருகே கிராமங்களில் விவசாய நிலங்களில் புகுந்து 6 காட்டுயானைகள் பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதனை வனத்துறையினர் வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
யானைகள் அட்டகாசம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள ஜவளகிரி, தளி, தேன்கனிக்கோட்டை, அய்யூர், ஊடேதுர்கம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டம் பல பிரிவுகளாக பிரிந்து முகாமிட்டு சுற்றித்திரிகின்றன.
இந்த யானைகள் நேற்று முன்தினம் இரவு தளி அருகே அகலக்கோட்டை, மேடுமுத்துக்கோட்டை, பாலதொட்டனப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் சுற்றித்திரிந்தன. அங்கு உள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. மேலும் அங்குள்ள நீர்நிலைகளில் யானைகள் குளித்து மகிழ்ந்தன.
விரட்டும் பணி தீவிரம்
இதுகுறித்து பயிர்களை யானைகள் சேதப்படுத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராமமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஜவளகிரி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காட்டுயானைகளை பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு யானைகள் கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றன.
இந்த காட்டுயானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story