ஓசூர் அருகே தடுப்பு சுவரில் மோதி லாரி தீப்பிடித்தது டிரைவர் கீழே குதித்து உயிர் தப்பினார்


ஓசூர் அருகே  தடுப்பு சுவரில் மோதி லாரி தீப்பிடித்தது டிரைவர் கீழே குதித்து உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 6 Dec 2021 1:40 PM IST (Updated: 6 Dec 2021 1:40 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே தடுப்பு சுவரில் லாரி மோதி தீப்பிடித்து கொண்டது. இதில் டிரைவர் கீழே குதித்து உயிர் தப்பினார்.

ஓசூர்:
ஓசூர் அருகே தடுப்பு சுவரில் லாரி மோதி தீப்பிடித்து கொண்டது. இதில் டிரைவர் கீழே குதித்து உயிர் தப்பினார்.
லாரி தீப்பிடித்தது
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கடப்பா கல் ஏற்றிக்கொண்டு 16 டயர் கொண்ட லாரி ஒன்று கேரள மாநிலம் கோட்டயம் நோக்கி வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியை கள்ளக்குறிச்சி மாவட்டம் சூலான் குறிச்சி கிராமத்தை சேர்ந்த டிரைவர் கோவிந்தன் (வயது30) என்பவர் ஓட்டி வந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பக்கமுள்ள தின்னப்பள்ளி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில் டீசல் டேங்கில் தீப்பிடித்து லாரி திடீரென எரிந்தது.. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் கீழே குதித்து உயிர் தப்பினார். 
போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஓசூர் தீயணைப்புதுறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் லாரி எரிந்து உருக்குலைந்தது. இந்த விபத்து குறித்து பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தடுப்பு சுவரில் லாரி மோதி தீப்பிடித்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story