திருச்செந்தூரில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை


திருச்செந்தூரில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 6 Dec 2021 7:12 PM IST (Updated: 6 Dec 2021 7:12 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஜீவாநகரை சேர்ந்தவர் விஜய். இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. நேற்று முன்தினம் இரவு சரஸ்வதியின் தாய் மகாராசி தனது மகளை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் உள்பக்கம் பூட்டியிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது, சரஸ்வதி மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கியபடி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் சரஸ்வதியை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
இதுகுறித்து மகாராசி திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் முரளிதரன் விசாரணை நடத்தினார். விசாரணையில், திருச்செந்தூர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள மைதானத்தில் நடந்த கபடி போட்டியை பார்க்க விஜய் சென்று உள்ளார். அவரை சரஸ்வதி வீட்டிற்கு வருமாறு அழைத்தார். ஆனால் நேரம் கழித்து தான் வருவேன் என விஜய் கூறினார். இதனால் கோபத்தில் சரஸ்வதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து உள்ளது. 

Next Story