மின்சாரம் தாக்கி குரங்கு குட்டி சாவு


மின்சாரம் தாக்கி குரங்கு குட்டி சாவு
x
தினத்தந்தி 6 Dec 2021 8:24 PM IST (Updated: 6 Dec 2021 8:24 PM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி குரங்கு குட்டி சாவு

பந்தலூர்

பந்தலூர் அருகே உள்ள நெலாக்கோட்டை பஜாரில் குரங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இங்கு நேற்று மின்கம்பிகள் மீது ஏறி விளையாடிய குரங்கு குட்டி ஒன்று மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தது. கீழே விழுந்து கிடந்து உயிருக்கு போராடிய அந்த குரங்கு குட்டியை மீட்க பொதுமக்கள் முயற்சித்தனர். ஆனால் நெருங்க விடாமல் பாசப்போராட்டம் நடத்திய தாய் குரங்கு உள்பட சக குரங்குகள் பொதுமக்களை துரத்தின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

உடனே பிதிர்காடு வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் குரங்குகளை விரட்டிவிட்டு குட்டியை மீட்டனர். தொடர்ந்து நெலாக்கோட்டை கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குரங்கு குட்டி பரிதாபமாக உயிரிழந்தது.  இதையடுத்து அதன் உடல் வனப்பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.


Next Story