கோவிலுக்குள் புகுந்த கரடி


கோவிலுக்குள் புகுந்த கரடி
x
தினத்தந்தி 6 Dec 2021 8:24 PM IST (Updated: 6 Dec 2021 8:24 PM IST)
t-max-icont-min-icon

கோவிலுக்குள் புகுந்த கரடி

ஊட்டி

குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் குன்னூர் அருகே அதிகரட்டி கோலனிமட்டம் கிராமத்தில் உள்ள பூமாதேவி கோவிலுக்குள் கரடி ஒன்று புகுந்தது. 

அங்கு பூஜைக்கு வைத்திருந்த எண்ணெயை குடிப்பதற்காக நள்ளிரவில் கரடி நுழைந்து உள்ளது. இந்த காட்சி கோவில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். 

Next Story