பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க விழிப்புணர்வு பிரசாரம்
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க விழிப்புணர்வு பிரசாரம்
ஊட்டி
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான ஒரு வார விழிப்புணர்வு பிரசார தொடக்க நிகழ்ச்சி, ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் எஸ்.பி.அம்ரித் தலைமை தாங்கி விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் விழிப்புணர்வு பதாகைகள், போஸ்டர்களை வெளியிட்டு மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு வழங்கி பேசினார். அப்போது கலெக்டர் கூறும்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க ஒரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி வருகிற 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் இடையே ஒலி வடிவில் தகவலை கொண்டு சென்றும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது என்றார்.
முன்னதாக விழிப்புணர்வு பிரசார பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன், முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, தோட்டக்கலை இணை இயக்குனர் (பொறுப்பு) ஷிபிலா மேரி மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story