தங்கும் விடுதியில் வியாபாரி தற்கொலை


தங்கும் விடுதியில் வியாபாரி தற்கொலை
x
தினத்தந்தி 6 Dec 2021 8:41 PM IST (Updated: 6 Dec 2021 8:41 PM IST)
t-max-icont-min-icon

பழனியில், தங்கும் விடுதியில் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.

பழனி

திருவள்ளூர் மாவட்டம் செந்நீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்கண்ணன் (வயது 37). இவர் பழைய ஆட்டோ, மோட்டார் சைக்கிள்களை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரி ஆவார். கடந்த 4-ந்தேதி பழனிக்கு வந்த இவர், அடிவாரம் சாலையில் உள்ள தனியார் தங்கும்  விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

நேற்று காலை இவர் தங்கியிருந்த அறை நீண்டநேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் விடுதி ஊழியர்கள், அறை கதவை தட்டி பார்த்தனர். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. சந்தேகம் அடைந்த ஊழியர்கள், இது குறித்து பழனி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் விடுதிக்கு வந்து அறை கதவை திறந்து பார்த்தனர். அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் சதீஷ்கண்ணன் பிணமாக கிடந்தார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

 இதனையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

பழனிக்கு அவர் எதற்காக வந்தார்?, தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சதீஷ்கண்ணனுக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story