தூத்துக்குடியில் மழைநீரை அகற்ற 52 சுகாதார முன்கள பணியாளர்கள் வருகை
தூத்துக்குடியில் மழைநீரை அகற்ற 52 சுகாதார முன்கள பணியாளர்கள் வந்துள்ளனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர பகுதியில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்து உள்ளது. இதனை அகற்ற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். இந்த நிலையில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையில் தேங்கி உள்ள மழைநீரை வெளியேற்றுவதற்காக நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட 6 நகராட்சிகளில் இருந்து சுகாதார முன்கள பணியாளர்கள் 52 பேர் நேற்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.
அவர்களை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, மாநகர பகுதியில் மழைநீரை அகற்றுவதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரை வழங்கினார்.
அப்போது, மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ் பொன்னையா, மாநகர நல அலுவலர் வித்யா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story