சேறும், சகதியுமான சாைல சீரமைக்கப்படுமா?


சேறும், சகதியுமான சாைல சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 6 Dec 2021 9:10 PM IST (Updated: 6 Dec 2021 9:10 PM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் பகுதியில் மழையால் சேதமடைந்த சேறும், சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கோட்டூர்:
கோட்டூர் பகுதியில் மழையால் சேதமடைந்த சேறும், சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 
சேறும், சகதியுமான சாலை
கோட்டூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது.  இதனால் கிராமப்புற சாலைகள் அனைத்தும் சேதமடைந்து சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. மேலும் சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த முதியவர்கள், குழந்தைகள்  சாலையில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் தேங்கிய மழைநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. எனவே கோட்டூர் பகுதியில் சேறும், சகதியுமான சாலையை சீரமைத்து தேங்கிய தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடு்த்தனர். 
கிருமி நாசினி தெளிக்க வேண்டும்
டெல்டா மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. கோட்டூர் ஒன்றிய பகுதியில் தற்போதும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வடிகால் வசதியின்றி ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிராமப்புற சாலைகளும், தெருக்களும் சேறும்- சகதியுமாக காட்சி அளிக்கிறது. தண்ணீர் வடியாமல் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி நிற்கிறது.  உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து கிராமப்புற சாலைகளையும், தெருக்களையும் உடனடியாக சீரமைக்க வேண்டும். சுகாதாரத்துறை மூலம் தெருக்களில் கிருமி நாசினிகளை தெளிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கிராமங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் குளங்களையும் சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்கவேண்டும் என மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனுக்கு ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிவா கதிரவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story