திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் விடிய விடிய போலீசார் சோதனை


திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் விடிய விடிய போலீசார் சோதனை
x
தினத்தந்தி 6 Dec 2021 10:25 PM IST (Updated: 6 Dec 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் விடிய விடிய போலீசார் சோதனை

திருப்பூர், 
பாபர் மசூதி இடிப்பு தினமான நேற்று திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் விடிய, விடிய போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான நேற்று திருப்பூர் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மசூதிகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். 24 மணி நேரம் ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் மாநகரில் மசூதிகள், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம், மாநகராட்சி சந்திப்பு, புஷ்பா சந்திப்பு உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். மாநகரில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் இதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ரெயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனை மேற்கொண்டனர். மெட்டல் டிடெக்டர் கருவி மூலமாகவும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
விடிய, விடிய சோதனை
திருப்பூர் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் மற்றும் வடக்கு போலீசார் நேற்று முன்தினம் இரவு திருப்பூர் ரெயில் நிலையம் முன்புறம் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ரெயில் நிலையத்துக்கு செல்பவர்கள், ரெயில் நிலையத்தில் இருந்து வருபவர்கள் என விடிய, விடிய சோதனை தொடர்ந்தது. மாநகரம் முழுவதும் சோதனை சாவடிகளில் இரவு முழுவதும் வாகன தணிக்கை செய்யப்பட்டது.

Next Story